
பாடாங் செராய், டிச 3 – பாடாங் செராய் நாடாளுமன்ற தேர்தலிலிருந்து தேசிய முன்னணி அதிகாரப்பூர்வமாக விலகிக்கொண்டு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் Sofee Razak கிற்கு இப்போது ஆதரவை தெரிவிக்கவிருக்கிறது . கூட்டரசு நிலையில் ஏற்பட்டுள்ள நட்புறவினால் பாடாங் செராய் தொகுதியை மீட்பதற்காக தேசிய முன்னணி கூட்டணி இப்போது பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்கும் என கெடா தேசிய முன்னணி தலைவர் Jamil Khir Baharom தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பினால் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சி.Sivaraj போட்டியிலிருந்து விலகுவார் என்ற ஆருடத்திற்கு முற்றுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன்வழி பாடாங் செராய் நாடாளுமன்ற தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கும பெரிக்காத்தான் நேசனலுக்குமிடையே நேரடி போட்டி ஏற்படுவதற்கு தேசிய முன்னணி உதவியிருப்பதாக இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் Sofee தெரிவித்தார்.