
பாடாங் செராய், நவ 28 – பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் எளிதாக வெற்றிப் பெற வழிவிடுமாறு, பக்காத்தானைச் சேர்ந்த PKR வேட்பாளர் கேட்பது , நியாயமான ஒரு கோரிக்கையல்ல என , தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சி. சிவராஜ் கூறியிருக்கிறார்.
மூன்று ஆண்டுகளாக பாடாங் செராய் தொகுதியில் சேவையாற்றி வருகிறேன். PKR வேட்பாளர் மொஹமட் சோஃபி வேட்பு மனுக்கு முதல் நாளே அத்தொகுதிக்கு வந்துள்ளார்.
எனவே, பகாங் தியோமான் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு பக்காத்தான் வேட்பாளருக்கு வழிவிட்டது போன்று, தாமும் செய்ய வேண்டுமென்பது நியாயமில்லை என சிவராஜ் கூறினார்.