அம்பாங் ஜெயா, நவம்பர்-4 – சிலாங்கூர், அம்பாங் ஜெயா, பாண்டான் இண்டாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், காரொன்று பள்ளத்தில் விழுந்தது.
சம்பவ இடம், பெரியக் கால்வாய் அருகே உள்ள பொது கார்நிறுத்துமிடமாகும்.
பள்ளத்தில் விழுந்த Proton Saga காரை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.