பத்தாங் காலி, ஏப் 30 – 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து Batang Kali – Genting சாலை மற்றும் மலைச் சரிவை சீரமைக்கும் பணி ஜூன் மாதம் முழுமையடையும் என பொதுப்பணித்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ Ahmad Maslan தெரிவித்திருக்கிறார். 19 மில்லியன் ரிங்கிட் செலவிலான சீரமைப்பு பணியின் 86 விழுக்காடு வேலைகள் முழுமையடைந்துவிட்டதாகவும் சாலைத் தடுப்பு மற்றும் சுவர் எழுப்பும் பணிகள் எஞ்சியிருப்பதாக அவர் கூறினார்.
தற்போது இந்த சாலையில் கெந்திங் மலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்காகவும், Batang Kali மற்றும் Hulu Selangor ரிலுள்ள வீடுகளில் குடியிருக்கும் மக்களுக்காகவும் சாலையின் ஒரு வழி தடம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக Ahmad Maslan தெரிவித்தார். ஜூலை 1ஆம்தேதி அந்த சாலை திறக்கப்படலாம் என அவர் கூறினார். கடந்த 2022 ஆம் ஆண்டு Father’s Organic Farm முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 18 பெரியோர்களும் 13 சிறார்களும் உயிரிழந்தனர்.