பாதிரியார் ரேய்மண்ட் கோ மீதான பணிக்குழுவின் அறிக்கை மாற்றியமைக்கப்பட்டதா? – உள்துறை அமைச்சு மறுப்பு
புத்ராஜெயா, செப்டம்பர் -25 – பாதிரியார் ரேய்மண்ட் கோ (Raymond Goh) காணாமல் போனது மீதான சிறப்புப் பணிக் குழுவின் அறிக்கை மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்படுவதை, உள்துறை அமைச்சு (KDN) மறுத்துள்ளது.
அவரின் குடும்பத்தாரிடமும் வழக்கறிஞர்களிடமும் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை அசலானதே.
அதில் watermark குறியீடு இருப்பதையும் KDN சுட்டிக் காட்டியது.
அவ்வறிக்கை ஒருவேளை கசிந்தால், அது யாரிடம் உள்ளதென்பதை கண்டறியவே அந்த watermark குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
அதோடு, அவ்வறிக்கை இரகசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகும்.
இந்நிலையில், தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில், பணிக்குழுவின் அறிக்கையின் நகலை watermark குறியீடு இல்லாமல் பாதிரியாரின் குடும்பத்திடமும் வழக்கறிஞரிடமும் வழங்க KDN முடிவுச் செய்துள்ளது.
சமூக ஆர்வலர் அம்ரி ச்சே மாட் (Amri Che Mat) 2016 நவம்பர் 24-ஆம் தேதி காணாமல் போன வேளை, 2017 பிப்ரவரி 13-ஆம் தேதி காரில் போகும் போது ரேய்மண்ட் கோ சிலாங்கூர் கிளானா ஜெயாவில் வைத்து முகமூடி கும்பலால் கடத்தப்பட்டார்.
அவ்விரு சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக 2019-ஆம் ஆண்டு மே மாதம் அச்சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டது.