Latestமலேசியா

பாதுகாக்கப்படும் களஞ்சிய நூல்; மலேசிய ஜனநாயக தேர்தல்

கோலாலம்பூர், நவ 25 – தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் மற்றும் உத்துசான் மலேசியாவின் முன்னாள் பத்திரிகையாளரான டாக்டர் மணிமாறன் ஆகியோரின் கைவண்ணத்தில் மலேசிய ஜனநாயக தேர்தல் என்ற தலைப்பில் 760 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டில் பொதுச் சேவைத்துறையில் இணைந்த அப்துல் ரஷிட் 1979 ஆம் ஆண்டு முதல் 1995 ஆண்டுவரை தேர்தல் ஆணைக்குழுவின் செயலாளராகவும் பின்னர் 1999ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டுவரை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் பரவலான அனுபவத்தை கொண்ட அப்துல் ரஷிட்டுடன் இணைந்து 22 ஆண்டு காலம் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் அரசியல், தேர்தல் மற்றும் தொழிற்சங்கம் போன்ற துறைகளில் தமக்கு இருந்த ஆர்வம்,ஈடுபாடு மற்றும் பல்வேறு தகவல்களை கொண்டு களஞ்சியமாகவே இந்த புத்தகத்தை கொண்டுவருவதில் டாக்டர் மணிமாறனின் உழைப்பும் அவரது ஈடுபாடும் தெரிகிறது. முற்றிலும் தேசிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தை யுனிவர்சிட்டி மலாயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகம் தொடர்பாக டாக்டர் மணிமாறன் வழங்கும் சுவையான தகவல்களை இப்போது கேட்போம்.

இந்த புத்தகத்தை எழுதுவதற்கும் அதில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள் என்று டாக்டர் மணிமாறனிடம் வினவப்பட்டபோது மொத்தத்தில் இந்த புத்தகம் வாக்காளர்களுக்கும், தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மற்றும் தேர்தலுக்கு பிறகு புதிய அரசாங்கம் அமைப்பதற்கு ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களாக செயல்படும் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்ப்டட மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்பு போன்ற அம்சங்கள் குறித்தும் இப்புத்தகம் விவரிக்கிறது.

அழகான வெள்ளை காகித்தத்தில் வரலாற்று பின்னணியோடு அற்புதமான தகவல்களை கதையைப்போல் சொல்லிக்கொண்டு செல்லும் போக்கும் , அது தொடர்பான புள்ளி விவரங்கள் , புகைப்படங்கள் என மிகவும் நேர்த்தியாக தேர்தல் தொடர்பான விவரங்களை இந்த நூல் கொண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த புத்தகம் பயனுள்ள வரலாற்று களஞசியமாகவும் திகழ்கிறது. மலாயா பல்கலைக்கழகத்தின் புத்தக நிலையம், ஷோப்பி, பல முக்கிய புத்தக கடைகளில் 140 ரிங்கிட் விலையில் இந்த புத்தகம் கிடைக்கும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!