Latestமலேசியா

பாதுகாப்பில்லாத செயலியை பதிவிறக்கம் செய்வதால் வங்கியிலிருந்து மாயமாகும் பணம்

கோலாலம்பூர், செப் 15 – பாதுகாப்பில்லாத செயலியைப் பதிவிறக்கம் செய்ய வைத்து , மக்களின் வங்கிப் பணத்தைக் களவாடிய மோசடி கும்பலைச் சேர்ந்த ஐவரைப் போலீசார் கைது செய்தனர்.

17 வயதில் இருந்து 21 வயதுடைய அந்த 3 ஆடவர்களும் 2 பெண்களும், தலைநகர் சுற்றுப் பகுதியில் கைது செய்யப்பட்டதாக , தேசிய போலீஸ் படை செயலாளர் Noorsiah Mohd Saaduddin தெரிவித்தார் .

சம்பந்தப்பட்ட அந்த கும்பல், பிரபல Chatting இணைய தளத்தில் பொய் கணக்கைத் திறந்து , தங்களின் படத்தையும் காணொளியையும் பார்க்க, APK எனப்படும் ‘ Android Package kit’ கோப்பின் மூலமாக செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படி அனுப்பி வைப்பர்.

அவ்வாறு அனுப்பப்படும் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கிலிருந்து, உரிமையாளர் அறியாமலே பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக , Noorsiah தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!