Latestமலேசியா

பாதுகாப்பு வலுவாக இருப்பதால் மன அமைதியோடு வாக்களிக்கச் செல்வீர்; சிலங்கூர் போலீஸ் தலைவர் வலியுறுத்து

ஷா அலாம், மே 10 – பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதால் இன்று கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் மன அமைதியோடு சென்று வாக்களிக்கும்படி சிலங்கூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ Hussein Omar Khan தெரிவித்தார். கவலை எதுவுமின்றி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம் என அவர் தெரிவித்தார். வாக்காளர்களின் பாதுகாப்பிற்கு சிலாங்கூர் போலீஸ் உத்தரவாதம் வழங்குகிறது.

வாக்களிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வாகனங்களை சரியான இடத்தில் நிறுத்திவிட்டு கடமையில் இருக்கும் அதிகாரிகளின் வழிகாட்டலை பின்பற்றும்படி Hussein கேட்டுக்கொண்டார். இன்று நடைபெறும் வாக்களிப்பில் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் சட்டவிதிகளை பின்பற்றும்படியும் அவர் நினைவுறுத்தினார். இந்த இடைத் தேர்தலில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஆட்சியாளர்கள், சமயம் மற்றும் இன விவகாரங்களை உட்படுத்திய 3 R விவகாரங்களை எழுப்புவதிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!