Latestஉலகம்

உலகின் விலை உயர்ந்த நகரம் சிங்கப்பூர்; மலேசியாவுக்கு 180-வது இடம்

பாரிஸ், நவம்பர் 30 – வாழ்க்கை செலவினம் அதிகரித்து வரும் நிலையில், நியூயார்க்கை பின்னுக்கு தள்ளி, உலகின் விலை உயர்ந்த நகரங்களாக சிங்கப்பூரும், ஜூரிக்கும் முறையே முதல் இரு இடங்களில் பெயர் பதித்துள்ளன.

இன்று வெளியிடப்பட்டுள்ள The Economist பதிப்பில், உலகின் விலை உயர்ந்த நகரங்கள் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஓராண்டு காலத்தில், உலகிலுள்ள 173 நகரங்களில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை சராசரியாக 7.4 விழுக்காடு வரையில் உயர்ந்துள்ளதாக, அந்த பிரிட்டன் சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில், உலகின் விலை உயர்ந்த நகரங்கள் பட்டியலின் மூன்றாவது இடத்தை, ஜெனீவா நியூயார்க்குடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

அடுத்ததடுத்த நிலைகளை ஹாங் காங்கும், லாஸ் ஏஞ்சல்ஸும் பிடித்துள்ளன.

உலகின் விலை உயர்ந்த நகரங்கள் பட்டியலில், முதல் பத்து இடங்களை பிடித்த நகரங்களில் நான்கு ஐரோப்பாவில் உள்ளன.

பாரிஸ் ஏழாவது இடத்தை பிடித்துள்ள வேளை; 2021-ஆம் ஆண்டு, உலகின் விலை உயர்ந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்த, கோபன்ஹேகனும், டெல் அவிவ்வும் தற்போது எட்டாவது இடத்தில் உள்ளன.

உலகின் விலை உயர்ந்த முதல் பத்து நகரங்கள் பட்டியலை சான் பிரான்சிஸ்கோ நிறைவுச் செய்துள்ளது.

அந்த தரவரிசையில், மேற்கத்திய பொருளாதார தடைகளால் ரூபிள் வீழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் தரவரிசையில் மிகப் பெரிய சரிவை எதிர்நோக்கியுள்ள நகரங்களாக, 142-வது இடத்திலுள்ள மோஸ்கோவும், 147-வது இடத்திலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கும் திகழ்கின்றன.

இதனிடையே, உலகின் மிகவும் மலிவான நகரம் எனும் பெருமையை டமாஸ்கஸ் பெற்றுள்ள வேளை; அதற்கு அடுத்த நிலையில் தெஹ்ரான் உள்ளது.

கோலாலம்பூர் இவ்வாண்டு ஒருபடி சரிந்து, அந்த பட்டியலில் உள்ள 227 நகரங்களில் 180-வது இடத்தை பிடித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!