
ஜோகூர், நவ 4 – உணவு விநியோகிப்பாளர் ஒருவர் கட்டிடத்திற்குள் செல்ல அனுமதி தராத பாதுகாவலரை திட்டியதால் ஏற்பட்ட சர்ச்சை பின்னர் கைகலப்பாக மாறியச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதை அடுத்து போலிசார் விசாரணையை தொடக்கியுள்ளனர்.
Lingkaran TRX கட்டிட பாதுகாவலர் தம்மை உணவு விநியோகிப்பாளர் திட்டியவுடன் உதவிக்கு பிற பாதுகாவலர்களையும் அழைத்த பின் அது அடிதடியில் முடிந்துள்ளது.
தாங்கள் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக டாங் வாங்கி துணை OCPD நஸ்ரோன் அப்துல் யூசப் தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் பதிவு செய்ய அந்த நபர் அழைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலிசை தொடர்பு கொள்ளுமாறு Nazron கேட்டுக் கொண்டார்.