
கோலாலம்பூர், ஜூன் 19 – கோலாலம்பூர் , Segambut அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாவலரை குத்தியதோடு, எட்டி உதைத்த நடிகர், மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க அந்த நடிகர், தனது நண்பரை சமையல் எண்ணெய்-யை வாங்கி வரச் சொல்லியிருக்கின்றார். அப்பொருளை வாங்கி வந்த நண்பரை, அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைய அனுமதியளிக்காததை அடுத்து, சம்பந்தப்பட்ட அந்த பாதுகாவலரை அந்த நடிகர் தாக்கியிருக்கின்றார்.
அதையடுத்து, அந்த பாதுகாவலர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாக, கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு துறையின் தலைவர் Habibi Majinji தெரிவித்தார்.