
கோலாலம்பூர், ஜன 10 – பாத்தாங் காலி நிலச்சரிவின் போது உயிரிழந்த நபரின் திருடப்பட்ட கைபேசியும், பணப் பையும் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
பணப் பையில் இருந்த ரொக்கமும் முக்கிய பத்திரங்களும் திரும்ப கிடைத்திருப்பதாக, உயிரிழ்ந்த அந்த பெண்ணின் கணவர் தெரிவித்தார்.
முன்னதாக, அந்த பெண்ணின் கணவர் , தனது ewallet- மின்னியல் பணப் பையுடன் இணைக்கப்பட்டிருந்த , தனது மனைவியின் Touch N Go அட்டை , அவரது இறப்புக்குப் பின் பயன்படுத்தப்பட்டதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
அதையடுத்து, டோல் சாவடியில் அந்த அட்டை பயன்படுத்தப்பட்டது தெரிய வர, பொதுச் சேவை ஊழியர் ஒருவரை போலிசார் கைது செய்தனர்.
இவ்வேளையில், கைதான அந்த பொதுச் சேவை ஊழியர் தீயணைப்பு வீரர் அல்ல என இதற்கு முன்பு சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு துறையின் தலைவர் Datuk Norazam Khamis கூறியிருந்தார்.