Latestஉலகம்வாழ்க்கை

பாம்புகளுக்கு என தனி தீவா? அங்கு மனிதர்கள் செல்லத் தடை!

பிரேசில் , ஸா பாலோ-வில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கடல் நீர் சூழந்திருக்கும் ஒரு குட்டித் தீவு உள்ளது. இந்த தீவில் உள்ள காடுகள், மலைகள், நீர் நிலைகள் பார்ப்பதற்கு எந்த அளவுக்கு அழகாக இருக்கிறதோ அந்தளவிற்கு ஆபத்தும்  நிறைந்தது.

 

இத்தீவு பாம்பு தீவு (Snake Island) என அழைக்கப்படுகிறது. இத்தீவிற்குள் மனிதர்கள் நுழைவதற்கு பிரேசில் அரசாங்கம் கடுமையான உத்தரவை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

106 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இத்தீவில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாம்புகள் உயிர்வாழ்கின்றதாம். விஷம் கொண்ட அந்த பாம்புகள் கொடூர பசித்தன்மையைக் கொண்டவை எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இத்தீவிற்கு வரும் பறவைகள் அந்த ஊர்வனத்துக்கு இரையாகின்றன.

நூற்றாண்டுகளுக்கு முன்பு இத்தீவில் உள்ள மழைக்காடுகளை அழித்து வாழைத்தோப்புகளை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும் அந்த முயற்சிகள் கைகூடவில்லையாம். அதன் பின்னர் 1909-இல் கலங்கரை விளக்கம் ஒன்று இங்கு கட்டப்பட்டது. அந்த கலங்கரை விளக்கத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் தான் இந்த விஷத் தீவில் கடைசியாக குடியிருந்தவர்கள் என நம்பப்படுகிறது.

மரணத்தீவு என வர்ணிக்கப்படும் இந்த தீவிற்கு மருத்துவர்கள், பாம்பை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்பவர்கள், கடற்படையினர் ஆகியோர் மட்டுமே செல்வதற்கு பிரேசில் அரசாங்கம் அனுமதியளிக்கிறது. அப்படியே யாரேனும் இத்தீவிற்குச் செல்ல விரும்பினால் பிரேசில் அரசாங்கம் மற்றும் கடற்படையின் அனுமதியை பெற வேண்டுமாம்.  அதே சமயத்தில் அங்கு செல்பவர்கள் யாராக இருந்தாலும் உடன் ஒரு மருத்துவரை அழைத்துச் செல்வதோடு இவர்களுக்காக கடற்கரையில் ஆம்புலன்ஸ் வண்டி காத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு பாதுகாப்பு அம்சத்திற்கான ஏற்பாடுகள அனைத்தையும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஒரு பாம்பு என்றாலே உயிர் போய்விடும், இது பாம்பு தீவு , சொல்லவா வேண்டும்.

உலகின் மிகக் கொடிய பாம்புகளில் ஒன்றான கோல்டன் லான்ஸ்ஹெட் (Golden Lancehead) பாம்பும் இத்தீவில் இருக்கிறது. தீண்டிய ஒரு மணி நேரத்திற்குள் மனிதன் இறந்துவிடக் கூடிய நச்சு தன்மை இந்த பாம்பிற்கு உள்ளது. ஒரே சமயத்தில் 5 பேரை கொல்லும் வலிமையும் இந்த பாம்பின் விஷத்துக்கு இருக்கிறதாம்.

https://www.photojoiner.net/image/kVVazKoy

இப்பாம்பு ஒருவரை தீண்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. விஷத்தை கக்கினாலே போதும், உடலில் அமிலம் பட்டது போல் இருக்கும்.

இந்த பாம்பின் விஷத்தில் உள்ள ஹீமோடாக்ஸிக் நச்சு (hemotoxic) குடலில் ரத்த போக்கை ஏற்படுத்துவதோடு சிறுநீரகத்தை செயலிழக்க செய்யும், மூளையில் ரத்த கசிவையும் ஏற்படுத்தும்.

அதே சமயத்தில் இப்பாம்பின் விஷத்தின் மூலம் நன்மைகளும் உண்டு. இரத்த உறைவு, இருதய நோய், இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை இந்த பாம்பின் விஷத்துக்கு உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனாலேயே அந்த தீவுக்கு அதிகமானோர் அனுமதியுடனும் அனுமதி இல்லாமலும் செல்ல முயற்சிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இத்தீவு ஒரு சுவாரஸ்யமான தகவலும் வெளியாகியுள்ளது. இத்தீவில் பல வரலாற்று சான்றுகளும் கிடைத்துள்ளதாம். இப்பகுதியில் இருந்து 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாம். அந்தச் சான்றுகள் மூலமாக இந்த பாம்பு தீவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு நாகரிகம் தோன்றியிருக்கலாம் எனவும் அங்கு  புதையல்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!