Latestஉலகம்

பாம்புடன் நீர்சறுக்கு விளையாட்டா? ; ஆடவருக்கு RM7,011 அபராதம்

[10:25 am, 19/09/2023] Ramesh VM: மெல்போர்ன், செப்டம்பர் 19 – ஆஸ்திரேலியாவில், தனது செல்லப்பிராணியான பாம்புடன் கடலில் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட ஆடவர் ஒருவருக்கு, அந்நாட்டு வனவிலங்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

ஹிகோர் பியூசாவும் (Vigor Fiuza), அவரது கம்பள மலைப்பாம்பு ஷிவாவும் (Shiva) இம்மாத தொடக்கத்தில் இணைய பிரபலம் ஆனார்கள்.

பியூசாவும் அவரது ஊர்வன செல்லப் பிராணியும், நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் காணொளி வைரலானதே அதற்கு காரணம்.

எனினும், அந்த புகழ் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. பியூசா, வனவிலங்கு துறை அதிகாரிகளின் கவனத்தை பெற்றார்.

பீயூசா தனது வளர்ப்பு பிராணிக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதோடு, பாம்பை பொதுவில் கொண்டு செல்லக்கூடாது எனும் விதியையும் மீறியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதனால், கடந்த வியாழக்கிழமை அவருக்கு ஈராயிரத்து 322 அமெரிக்க டாலர் அல்லது ஏழாயிரத்து 11 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
[10:25 am, 19/09/2023] Ramesh VM: கழிவறை குழியில் கால் சிக்கியது ; ஒரு மணி நேரமாக தவித்த சிறுவன் மீட்பு

காஜாங், செப்டம்பர் 19 – பாலாகோங்கிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வலது கால் கழிவறை குழியில் சிக்கிக் கொண்டதை அடுத்து, ஒன்பது வயது சிறுவன் ஒருவன் ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக வலியால் அவதியுற நேர்ந்தது.

அச்சம்பவம் தொடர்பில், இரவு மணி 8.36 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததும், ஐவர் அடங்கிய தீயணைப்பு மீட்புப் படை குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் முக்தார் தெரிவித்தார்.

கழிவறை குழியில் சிக்கிக் கொண்டிருந்த சிறுவனின் கால், இரவு மணி 9.11 வாக்கில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்ட வேளை ; மேல் நடவடிக்கைக்காக அவன் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!