
இந்தியா, நவ 4 – தமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் விருந்துகளில் பாம்புகளின் விஷத்தை போதைப் பொருளாக பயன்படுத்தினார் என “Big Boss” வெற்றியாளர் ஒருவர் மீது புகார் கிளம்பியுள்ளது.
அந்த விருந்து நிகழ்ச்சிகளுக்கு பாம்புகளையும் அதன் விஷத்தையும் கொடுத்து பணம் பெற்று வந்த ஐவர் Noida-வில் பிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் ஹிந்தி “Big Boss” நிகழ்ச்சியின் வெற்றியாளரான எல்விஷ் யாதவ் மீது இப்புகாரை வைத்துள்ளனர்.
பாம்பு விஷம் ஒரு வகை அரிய போதைப் பொருளாக பதப்படுத்தப்படுவது பல ஆடம்பர விருந்துகளில் அண்மையக் காலமாக அதிகரித்து வரும் நிலையில்
எல்விஷ் பாம்புகளை வைத்து வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் கைதானவர்கள் கூறியுள்ளனர்.
அறுவர் அந்த விருந்து நிகழ்சிகளுக்கு காரணம் என புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்விஷ் யாதவ்மட்டும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இன்ஸ்தாகிராமில் 15.6 மில்லியன் பின் தொடர்வோரைக் கொண்டுள்ள அவர் தம்மீது வைக்கப்பட்டுள்ள புகார் பொய்யானவை எனக் கூறியுள்ளார்.
போலிசார் விசாரணையை தொடக்கியுள்ள நிலையில் எல்விஷ் யாதவ் கைது செய்யப்பட வேண்டும் என விலங்கியல் ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.