
இந்தியா, செப் 5 – கட்டிலில் சிறுமி ஒருவர் பொம்மைகளுக்கு பதிலாக பாம்புகளை கட்டயணைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்கும் காணொளி வைரலாகி வருகிறது.
அதில் அரியானா எனும் சிறுமி, பாம்புகளை கட்டிப்பிடித்தபடி தூங்குகிறார், பாம்புகளோ அவரின் உடலை சுற்றியபடி நெளிவது நம்மை பதற வைக்கின்றன.
ஆனால் அந்த சிறுமியோ எந்த பதட்டமும் இல்லாமல் தூங்குகிறார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள நிலையில், பலர் இதுகுறித்து ஆச்சரியப்பட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.