ஈப்போ, பிப் 24 – ஈப்போவில் Menglembu வில் ஒரு மளிகைக் கடையில் புகுந்து இருவர் கொள்ளையிடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது.
அந்த காணொளியில் இடம்பெற்ற கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சியை போலீசார் தீவிரப்படுத்தி வருவதாக பேரா போலீஸ் தலைவர் Datuk Mior Faridalathrash Wahid தெரிவித்தார். இந்த கொள்ளையினால் கடை உரிமையாளருக்கு 1,600 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இருவர் மாலை ஆறு மணிக்கு அக்கடையில் புகுந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி அக்கடையில் கொள்ளையடிக்கும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த இரண்டு நபர்களும் தலைக்கவசம் அணிந்திருந்ததோடு அவர்களில் ஒருவர் பாராங் கத்தியை வைத்திருந்ததையும் அந்த காணொளியில் காண முடிந்தது.