பாரிஸ், ஆகஸ்ட் 9 – மும்முரமாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப் பதக்கம் உண்மையில் தங்கத்தால் செய்யப்பட்டதா இல்லையா? அதன் விலை எவ்வளவு என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
அத்தனை கேள்விகளுக்கும் முடிச்சவிழ்க்கும் வகையில் Forbes Australia இதழில், அதற்கான பதில் வெளியிடப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்கப்படும் ஒரு தங்கத்தின் விலை 4,250 ரிங்கிட் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட்ட பதக்கங்களில் விலை அதிகமான பதக்கம் எனக் கூறப்படுகிறது.
இந்த தங்கப் பதக்கம் 529 கிராம் எடை கொண்டது. அதில் 6 கிராம் தூய தங்கமும், 95.4%-க்கும் அதிகமாக வெள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
அந்த தூய தங்கத்தையும் பதக்கத்தின் மீது முலாம் பூசப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தப் பதக்கங்களில் 18 கிராம் பாரிஸ் ஈபிள் டவரின் இரும்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
அதுபோலவே, 525 கிராம் எடை கொண்ட வெள்ளிப் பதக்கம் 2,174 ரிங்கிட்டாகும்.
மேலும், 455 கிராம் எடையுள்ள வெண்கலப் பதக்கத்தின் மதிப்பு தோராயமாக 58 ரிங்கிட்டாகுமாம்.