Latestமலேசியா

பாரிஸ் ஒலிம்பிக், தேசிய முக்குளிப்பு வீராங்கனை டபிதா அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வு

கோலாலம்பூர், ஆக 8 -பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தேசிய முக்குளிப்பு வீராங்கனையான Nur Dhabitah Sabri 3 மீட்டர் Springborad தனிப்பட்டோருக்கான பிரிவில் இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் மொத்தம் 283.65 புள்ளிகளை பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஒலிம்பிக் போட்டியில் தேசிய சைக்கிளோட்ட வீரரான அஸிசுல்ஹஸ்னி அவாங்கின் (Azizulhasni Awang ) ஆண்களுக்கான Sprint பிரிவில் அவரது போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. தேர்வு சுற்றில் மூன்றாவது இடத்தை பெற்றதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு அவர் தேர்வு பெறத் தவறினார். அடுத்து அவர் Keirin சைக்கிளோட்டப் போட்டியில் முழு கவனத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எடை தூக்கும் போட்டியில் மலேசியாவின் நம்பிக்கை நட்சத்திராக திகழ்ந்த
Aniq Kasdan மயிரிழையில் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார். 61 கிலோ எடை தூக்கும் பிரிவில் புதிய சாதனையை ஏற்படுத்திய Aniq மொத்தம் 297 கிலோ எடையை தூக்கி ஒரு புள்ளி வேறுபாட்டில் நான்காவது இடத்தைப் பெற்றார். அமெரிக்காவின் Hampton Morris 298 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை பெற்றார். இப்போட்டியில் சீனாவில் Li Fabin தங்கப் பதக்கத்தையும், தாய்லாந்தின் Theerapong Silachai  வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!