Latestஉலகம்விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு மெரிட் அடிப்படையில் தகுதிப் பெறும் முயற்சியில் அசீம் ஃபாஹ்மி & ஷெரீன் இருவரும் தோல்வி

கசக்ஸ்தான், ஜூன்-23, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி அடிப்படையில் (Merit) பங்கேற்கும் முயற்சியில் நாட்டின் மின்னல் வேக ஓட்டக்காரர் முஹமட் அசீம் ஃபாஹ்மி (Muhammad Azeem Fahmi) 400 மீட்டர் ஓட்டத் தாரகை ஷெரீன் சேம்சன் வல்லபாய் ( Shereen Samson Vallabouy) இருவரும் தோல்வி கண்டுள்ளனர்.

குறைந்தபட்சம் உலகத் தர வரிசை அடிப்படையிலாவது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிப் பெற, கசக்ஸ்தான் பொது ஓட்டப்பந்தயப் போட்டியே அவர்களுக்கு கடைசி வாய்ப்பாக இருந்தது.

அவ்வகையில் 100 மீட்டரில் வாகை சூடுவதோடு, 10.20 வினாடி நேரத்தைப் பதிவுச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த அசீம் ஃபாஹ்மி, நேற்றைய இறுதிச் சுற்றில் 10.37 வினாடிகளைப் பதிவுச் செய்து வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்றார்.

ஷெரீனோ, 400 மீட்டர் ஓட்டத்தில் வாகை சூடினாலும் தனது தேசிய சாதனை நேரமான 51.79 வினாடிகளை முறியடிக்கத் தவறினார்.

இறுதிப் போட்டியில் ஷெரீன் பதிவுச் செய்த நேரம் 52.60 வினாடிகளாகும்.

ஒலிம்பிக்கிற்கு நேரடியாகத் தகுதிப் பெற வேண்டுமென்றால், 100 மீட்டரில் அசீம் 10.00 வினாடிகளையும், 400 மீட்டரில் ஷெரீன் 50.95 வினாடிகளையும் பதிவுச் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!