பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம்; தங்கத்தைத் தற்காத்தார் பூப்பந்து வீரர் Liek Hou
பாரீஸ், செப்டம்பர் -3, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மலேசியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
SU5 உடல் குறைபாடு பிரிவுக்கான
ஆடவர் பூப்பந்துப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் நாட்டின் Cheah Liek Hou வாகை சூடினார்.
இறுதியாட்டத்தில் இந்தோனீசியப் போட்டியாளரை 21-13, 21-15 என்ற நேரடி செட்களில் வீழ்த்தி Liek Hou தங்கப்பதக்கத்தைத் தற்காத்துக் கொண்டார்.
வெற்றிப் பெறுவதற்கு வெறும் 41 நிமிடங்களே அவருக்குத் தேவைப்பட்டது.
36 வயது Liek Hou 2020 தோக்யோ ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்றவராவார்.
இதையடுத்து இந்த பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மலேசியா இதுவரை 1 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
வெண்கலப் பதக்கம் முன்னதாக திடல் தடப் போட்டிகளில் கிடைக்கப் பெற்றது.
T44 உடல் குறைப்பாட்டுக்கான ஆடவர் 100 மீட்டர் ஓட்டத்தில் Eddy Bernard மூன்றாவதாக வந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.