Latestமலேசியா

பார்வையற்ற கணவர் கொலை; அக்காள் – தம்பிக்கு 33 ஆண்டுகள் சிறை

புத்ரா ஜெயா, ஆக 14 – நான்கு ஆண்டுகளுக்கு முன் காஜாங், கம்போங் பாரு சுங்கை சுவாவில் பார்வையற்ற கணவரை கொலை செய்த குற்றத்திற்காக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதிப்பதாக மேல்முறையீடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி ருஷிமா கஷாலி தலைமையிலான் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. 48 வயதுடைய S . ஏஞ்சலா தேவி ( Angela Devi ) மற்றும் 44 வயதுடைய அவரது சகோதரர் S.விஜயா ஆகியோரின் முறையீடு ஏற்கும்படியாக இல்லை. அவர்களுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு நிலைநிறுத்தப்படுவதோடு அதன் முடிவு உறுதியாக இருப்பதாக நீதிபதி ருஷிமா கஷாலி தெரிவித்தார். இந்த மேல் முறையீட்டை செவிமடுத்த இதர இரு நீதிபதிகள் அகமட் ஸைடி இப்ராஹிம் மற்றும் நோர்டின் பஹாருடின் ஆகியோராவார். எனினும் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றம் விதித்த மரண தண்டனை தற்போது சிறைத் தண்டனையாக மேல் முறையீட்டு நீதிமன்றம் மாற்றியுள்ளது.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியிலிருந்து Angela வுக்கான சிறைத் தண்டனையும் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து விஜயாவுக்கான சிறைத் தண்டனையும் தொடங்குவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் விஜயா 50 வயதுக்கும் குறைவாக இருப்பதால் அவருக்கு குறைந்தபட்ச 10 பிரம்படியும் விதிக்கப்பட்டது. அந்த இருவரும் கூட்டரசு நீதிமன்றத்தில் இறுதி முறையீடு செய்யமுடியும். அந்த இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம்தேதி மதியம் 1 மணிக்குள் காஜாங் கம்போங் பாரு சுங்கை சுவாவில் உள்ள PKNS மலிவு விலை வீடமைப்புப் பகுதியிலுள்ள வீட்டில் 59 வயதான ஆர் தேவராஜு என்பவரை கொலை செய்ததற்காக உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. தனது வீட்டில் திருட்டு நடந்தாகவும் அப்போது போக்குவரத்து மற்றும் பழைய உலோக வியாபாரம் செய்து வந்த தனது கணவர் தலையில் தாக்கப்பட்டதாகவும் Angela போலீசாரிடம் கூறியதாக நம்பப்படுகிறது. இந்தச் சம்பவம் பரம்பரை சொத்துக்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என தங்களது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!