கீவ் , பிப் 28 – உக்ரைய்க்னுக்கு எதிராக போரை தொடுத்திருக்கும் ரஷ்ய படைகள் பொதுமக்கள் குடியிருக்கும் இடங்கள், பாலர் பள்ளிகள், ஆதரவற்ற இல்லங்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இதனை ரஷ்யா மறுத்தது.
ரஷ்ய தாக்குதலால் எத்தனை பேர் மாண்டனர் என்ற விவரங்கள் துல்லியமாக அறிவிக்கப்படவில்லை. இதுவரை பொதுமக்களில் 210 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைய்ன் மனித உரிமை ஆணையம் தெரிவித்தது. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என பலர் காயம் அடைந்தனர்.