
கோலாலம்பூர், நவ 17 – பாலஸ்தீன் -இஸ்ரேல் நெருக்கடியில் நாடு வெளிப்படையாக குரல் எழுப்பி வருவதால் மலேசியாவுக்கு எதிரான நேரடி மிரட்டல் எதுவும் இல்லையென போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் உசேன் தெரிவித்திருக்கிறார். எனினும் இந்த விவகாரம் தொடர்பில் நாங்கள் இன்னமும் வேவு மற்றும் அது தொடர்பான தகவல்களை திரட்டி வருகிறோம் என அவர் கூறினார். போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்தவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டபோது அவர் இதனை தெரிவித்தார். இந்த நிகழ்வில் துணை ஐ.ஜி.பி டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை மற்றும் இதர உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடுமைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அரசாங்கம் மற்றும் உலகின் இத நாடுகளுடன் மலேசிய போலீசாரும் ஒருமித்த கருத்தை கொண்டிருப்பதாக ரஸாருடின் கூறினார்.