Latestமலேசியா

பாலஸ்தீனிய நோயாளிகள், துவாங்கு மிசான் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை

செப்பாங், ஆகஸ்ட் 16 – காசா போரில் காயமடைந்த 41 பாலஸ்தீன பிரஜைகள் தற்போது சுபாங் விமான தளத்தில் உள்ள ஹாங்கர் எண் 16 ( Hangar nombor 16 Skuadron) படைப்பிரிவில் நோயறிதலுக்கான முதற்கட்ட பரிசோதனைக்காகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயறிதல் பரிசோதனைக்குப் பின்னர், 26 இராணுவ மருத்துவமனை வாகனங்களின் வழி துவாங்கு மிசான் இராணுவ மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டுள்ள 3 வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறுவார்கள் எனப், பாதுகாப்பு அமைச்சர், டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் (Datuk Seri Mohamed Khaled Nordin) தெரிவித்தார்.

அந்த 41 பேரில், 21 பெண்கள், 20 ஆண்கள் என 8 மாதங்கள் முதல் 62 வயது வரை உள்ள நோயாளிகளில், எலும்பு முறிந்தவர்கள், தலையில் கடுமையான காயங்கள், குறிப்பாக கை, கால்களை இழந்தவர்களாவர்.

இதனிடையே, அந்த நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலும் குழந்தைகள் என்பதால், மனிதாபிமான அடிப்படையில், அவர்களின் மொத்தம் 86 குழந்தைகளும் இங்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.

காயமடைந்த பாலஸ்தீன நோயாளிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசு மலேசிய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு ஏர்பஸ் ஏ-400எம் விமானங்கள் இன்று சுபாங் விமான தளத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தன.

இஸ்ரேலிய வன்முறை மற்றும் கொடுமைகளை எதிர்கொண்ட நாட்டிலிருந்து, பாலஸ்தீன நோயாளிகளைச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் ஐந்தாவது நாடு மலேசியா ஆகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!