Latestமலேசியா

பாலஸ்தீன நெருக்கடி குறித்து விரைவில் அரபு தலைவர்களுடன் அன்வார் பேச்சு நடத்துவார்

கோலாலம்பூர், நவ 6 – பாலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக துருக்கியே மற்றும் ஈரான் உட்பட அரபு உலகின் தலைவர்களை மலேசியா தொடர்பு கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிரேசில், அயர்லாந்து, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமட் சல்மான் , துருக்கியே அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஆகியோருடன் விவாதிக்கப்பட்டது. இஸ்லாமிய தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தை நடத்துவதற்காக விரைவில் அதாவது இரண்டொரு நாளில் அரபு தலைவர்களுடன் மீண்டும் பேச்சு நடத்தப்படும் என அன்வார் கூறினார். இன்று பிரதமர் அலுவலகத்தின் உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்புக்குப் பின் அன்வார் இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!