பாலிங், ஏப் 25 – கெடாவில் Balingகில் நான்கு வட்டாரங்களில் நேற்று மாலையில் வீசிய புயலினால் 14 வீடுகள் சேதம் அடைந்தன. Mukim Siong, Tawar, Bakai, Teloi Kanan ஆகிய பகுதிகள் புயலின் பாதிப்புக்கு உள்ளாகின. இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை மணி ஆறு அளவில் புகார்களை பெற்றதாக Baling மாவட்ட பொது தற்காப்பு அதிகாரி ஓய்வு பெற்ற Leftenan Mohd Faizol Abd Aziz தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொது தற்காப்பு படையின் 15 பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
புயலினால் சாலை மற்றும் வீடுகளின் மேல் விழுந்த கிடந்த மரங்களையும் அவர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். எந்தவொரு உயிர்சேதம் மற்றும் எவரும் காயம் அடைந்ததற்கான தகவல் எதனையும் பெறவில்லையென Mohd Faizol தெரிவித்தார். தற்போது வானிலை உறுதியற்ற நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.