ஜகர்த்தா, பிப் 4 – இந்தோனிசியாவின் பிரபல சுற்றுலா தீவான பாலிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துலக விமான சேவை மீண்டும் தொடங்கியது. சுற்றுப்பயணிகளுக்கு பாலியை முழுமையாக திறந்துவிடுவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் முடிவு செய்தது. ஜப்பானின் நரித்தா விமான நிலையத்திலிருந்து ஆறு பயணிகளுடன் இந்தோனேசியாவின் கருடா விமான நிறுவனத்தின் விமானம் நேற்று முதல் முறையாக பாலி வந்தடைந்தது. பாலி விமான நிலையம் வந்தடையும் சுற்றுப் பயணிகளுக்கான விசாவை பரிசீலிக்கும் நடைமுறையை இந்தோனேசியா இன்னும் தொடங்கவில்லை. நேற்று வந்த ஜப்பானின் ஆறு சுற்றுப்பயணிகளும் வர்த்தக விசா மூலமாக பாலி வந்தடைந்தனர்.
Related Articles
Check Also
Close