மணிலா, மார்ச் 8 – வயது குறைந்தவர்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க, பிலிப்பீன்சில் பாலியல் உறவுக்கான வயது 16 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான சட்ட மாற்றத்திற்கு அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுதேர்த்தே (Rodrigo Duterte) இணக்கம் தெரிவித்துள்ளார்.
அந்த புதிய சட்டத்தின் கீழ் 16 வயதுக்கு கீழ்பட்ட ஒருவருடன் பாலியல் உறவு கொண்டால் அது சட்டப்படி குற்றமாகும். அந்த குற்றத்திற்கு அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். இதற்கு முன்பு அந்நாட்டில் பாலியல் உறவுக்கான சம்மதம் 12-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.