Latestஉலகம்

பாலியல் தொல்லை சர்ச்சை; சீன டென்னிஸ் விளையாட்டாளர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

பெய்ஜிங், பிப் 8 – கடந்தாண்டு, நாட்டின் மூத்த அரசியல்வாதி மீது பாலியல் தொல்லை தொடர்பில் குற்றச்சாட்டை சுமத்திய சீனாவின் டென்னிஸ் விளையாட்டாளர் பெங் ஷுவாய் ( Peng Shuai ) , விளையாட்டுத் துறையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில், France விளையாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர், தனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.

கடந்த நவம்பரில், டிவிட்டர் போன்ற Weibo (வெய்போ ) சமூக ஊடகத்தில் , Peng , அந்நாட்டின் முன்னாள் உயர் அதிகாரி தம்மை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தியதாக மிக நீண்ட பதிவை இட்டிருந்தார். அதன் பின்னர் அந்த பதிவை அவர் நீக்கியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!