
கோலாலம்பூர், மார்ச் 10 – 2022 பாலியல் தொல்லை தடுப்பு சட்டம் இவ்வாண்டு கட்டம் கட்டமாக அமலுக்கு வருமென மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் Nancy Shukri தெரிவித்தார்.
அந்த சட்டம் முழுமையாக அமலுக்கு வருவதற்கு முன்பாக, பாலியல் தொல்ல சம்பவங்கள் எந்தளவு கடுமையானவை என்பது குறித்து , முதலில் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியுள்ளது.
பாலியல் தொல்லையை எப்படி கண்டறிவது? அதற்காக இயற்றப்பட்டுள்ள சட்டத்தைக் கொண்டு எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் , மக்களுக்கு எடுத்துரைக்கப் பட வேண்டியுள்ளதாக அமைச்சர் கூறினார்.