Latestமலேசியா

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 402 குழந்தைகள் & இளைஞர்கள் மீட்பு; உஸ்தாஸ் உட்பட 171 பேர் கைது

குவாந்தான், செப்டம்பர் 11 – சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானிலுள்ள 20 சமூகநல இல்லங்களில் நடத்தப்பட்ட ‘Op Global’ அதிரடி சோதனை மூலம் ஒரு வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 402 குழந்தைகளையும் பதின்ம வயதினர்களையும் போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மேற்கொண்ட சோதனையின் வழி, அந்த சமூகநல இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளும் இளைஞர்களும், துன்புறுத்தப்பட்டதோடு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் பிறரை பாலியல் நோக்கத்தோடு அணுகவும் வற்புறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சிறு குழந்தைகள் என்றும் பாராமால தவறு செய்தால் சூடு வைத்தும் அவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ ரீதியிலும் அவர்களில் சிகிச்சைகள் மறுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொடர்ந்து 17 வயது முதல் 64 வயதுடைய 105 பெண்கள் உட்பட, 171 ஆண்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹூசைன் கூறியுள்ளார்.

காப்பாற்றப்பட்ட 402 பேரில் 201 பெண்களும் 201 ஆண்களும் அடங்குவர்.

விசாரணையில், இவ்விவகாரத்தில் Global Ikhwan Service and Business Holding எனும் நிறுவனம் மனித கடத்தல் மட்டுமின்றி பிற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது 4 வழக்குகளின் அடிப்படையில் இச்சம்பவம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!