கோலாலம்பூர், பிப் 16 – புதிதாக பிரசவித்த குழந்தையை கொலை செய்தததாக, பாலியல் வன்முறைக்கு ஆளான 15 வயது இளம் பெண் மீது சுமத்தப்பட்ட குற்றச்ச்சாட்டினால் அதிர்ச்சி அடைவதாக , MMA மலேசிய மருத்துவ சங்கம் தெரிவித்தது.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆணோ பெண்ணோ, மனநல ரீதியாக பாதிக்கப்படுவார். அதோடு பாலியல் வான்முறையால் கர்ப்பமடையும்போது, சம்பந்தப்பட்ட பெண் அதிர்ச்சிக்குள்ளாவார். பின்னர் குழந்தை பிறக்கும்போது சமூகத்தை எப்படி எதிர்கொள்வது போன்ற மன அழுத்தத்தையும் அவர் எதிர்நோக்கியிருப்பார் என , மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் Dr. Koh Kar Chai தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் விவகாரத்தில் , அவருக்கு இருமுறை அநியாயம் இழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.