ஷா அலாம் , டிச 12 – பல்வேறு வகையான 4,335 பாலியல் விளையாட்டுப் பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்காக சுகாதார சாதன கிடங்கின் நிர்வாகி ஒருவருக்கு
6,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
30 வயதுடைய கோ வெய் கியாங் ( Goh Wei Keang ) குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு மாஜிஸ்திரேட் Ameera Mastura Khamis அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அழிக்கும் நோக்கத்தில் அதனை உள்துறை அமைச்சிடம் ஒப்படைக்கும்படியும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி சுங்கை பூலோ கம்போங் பாருவிலுள்ள தனது கிடங்கில் பாலியல் விளையாட்டுப் பொருட்களை வைத்திருந்ததாக கோ வெய் கியாங் (Goh Wei Keang)குற்றச்சாட்டப்பட்டார்.
இணையத்தில் மூலமாக இந்த பாலியல் பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவதற்காக தனது கிடங்கில் அந்த ஆடவர் இப்பொருட்களை வைத்திருந்தது விசாரணை மூலம் தெரியவந்தது.