
பாலி, செப் 2 – நேற்று இந்தோனேசியாவின் பாலி தீவில், ஊபூட் ( Ubud) எனுமிடத்தில் உள்ள தங்கும் விடுதியின் மின் தூக்கி திடிரென கீழே விழுந்து நொருங்கியதில், அதில் இருந்த 5 ஊழியர்கள் மரணம் அடைந்தனர்.
இச்சம்பவம் நேற்று இந்தோனேசியா நேரப்படி மதியம் 1 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
ஊபூட் ( Ubud), பாலியில் உள்ள ஒரு சுற்றுலாப் பகுதியாகும்.
அந்த 5 ஊழியர்களும் மின் தூக்கியில் ஏறியபோது, மின் தூக்கியின் பெல்ட் அறுந்ததாகவும், அதனால் மின் தூக்கி வேகமாக கீழே விழுந்ததில் நொருங்கியதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மின் தூக்கி 100 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளதாக ஊபூட் போலிஸ் தெரிவித்துள்ளது.