ஜகார்த்தா, மார்ச் 7 – மலேசியா, அமெரிக்கா , பிரிட்டன் உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் பாலி விமான நிலையம் சென்றடைந்தவுடன் இனி VoA எனப்படும் விமான நிலையம் சென்றடைந்தவுடன் வழங்கப்படும் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான திட்டத்தை இந்தோனேசியா தொடங்கிவிட்டதாக அந்நாட்டின் குடிநுழைவுத்துறைக்கான பொது உறவுகளின் ஒருங்கிணைப்பாளர் Achmad Nur Salleh வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகள் பாலிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மார்ச் 14ஆம் தேதிக்கு முன்னதாகவே VoA- விசாவுக்கு மனுசெய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு விட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.