
மலாக்கா, நவ 2 – பால் அடைத்துக் கொண்டதாக நம்பப்படும் இரண்டு மாத குழந்தை இறந்தது. மலாக்கா, தாமான் மலாக்கா ராயாவில் உள்ள தமது வீட்டில் முதல் நாள் இரவு 11 மணியளவில் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தாமும் அக்குழந்தையுடன் தூங்கிவிட்டதாக அக்குழந்தையின் தாயாரான 26 வயதுடைய பெண் தெரிவித்தார். அதன் பின் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் குழந்தைக்கு பால் மாவை கலக்கி கொடுத்துவிட்டு குழந்தையை மெத்தையில் போட்டு தூங்க வைத்ததாகவும் நேற்று காலை 5 மணிக்கு கழிவறைக்கு செல்ல எழுந்தபோது குழந்தை குப்புற படுத்திருந்த நிலையில் அசைவற்று இருந்ததால் உடனயாக மலாக்கா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அவர் குழந்தையை கொண்டு சென்றதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோபர் படிட் தெரிவித்தார்.
மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அக்குழந்தைக்கு 40 நிமிடங்களுக்கு சுவசிப்பதற்கான CPR சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது . எனினும் காலை மணி 7.10 அளவில் அக்குழதை இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார். அக்குழந்தையின் உடலில் சவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அதன் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியும் என கிறிஸ்டோபர் படிட் கூறினார்.