
கோலாலம்பூர், ஆக 28 – சீனப் பிரஜைகள் 54,000 பேருக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்படவிருப்பதாக சமூக வலைத்தளத்தில் பாஸ் கூறிக்கொண்டது தொடர்பில் அக்கட்சிக்கு எதிராக தாம் போலீசில் புகார் செய்யவிருப்பதாக பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தெரிவித்திருக்கிறார். இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்பதோடு குற்றவியல் அவதூறு அம்சத்தை கொண்டதாக இருக்கிறது. இது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ பைபுடின் நசுட்டியோன் இஸ்மாயிலுடன் தாம் சந்திக்கவிருப்பதாகவும் அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்ளுக்கு எதிராக போலீசில் புகார் செய்ய முடியும் என ரபிசி ரம்லி கூறினார். இதுபோன்ற வதந்தியை பரப்பிய பாஸ் கட்சி அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என தமது டுவிட்டரில் ரபிசி பதிவிட்டுள்ளார்.