
கோலாலம்பூர், ஜன 26 – கட்சியில் இணையும்படி பாஸ் விடுத்த அழைப்பை அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான கைரி ஜமாலுடின் நிராகரித்தார். சாதாரண உறுப்பினராக இருந்தாலும் தமது விசுவாசம் அம்னோவுடன்தான் என்று கூறிய அவர், பாஸ் கட்சியின் அழைப்புக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். அம்னோவிலிருந்து நீக்கப்பட்டால் பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேசனலில் கைரி இணையலாம் என பாஸ் கட்சியின் உதவித் தலைவர் அகமட் சம்சூரி அழைப்பு விடுத்திருந்தார்.