Latestமலேசியா

10 இடங்களில் வெப்பம் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது -வானிலை துறை

நாட்டின் 10 இடங்களில் வெப்பம் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாக மலேசியா வானிலை துறை தெரிவித்துள்ளது.
கெடாவில் Langkawi தீவு, Kota Setar, Yan, Pendang, Pokok Sena, Sik, Baling, பினாங்கில் Seberang Perai Utara பேராக்கில் Kuala Kangsar, சபாவில் Beaufort ஆகிய இடங்கள் அவையாகும். இது நேற்றைய 6 மணி வரை நிலவரம் எனவும் வானிலை துறை கூறியுள்ளது.

தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு ஓர் இடத்தின் உஷ்ணம் அதிகபட்சமாக 35 முதல் 37 டிகிரி செல்சியஸ்-சை எட்டினால் அவ்விடம் வெப்ப எச்சரிக்கை அளவில் இருப்பதாக அறிவிக்கப்படும். வடகிழக்கு பருவத்தின் இறுதி கட்டத்தில் தற்போது மலேசியா உள்ளதென்றும் இது வரும் மார்ச் இறுதி வரை நீடிக்கும் என்றும் வானிலை துறை முன்பு கூறியிருந்தது. இக்காலகட்டத்தில் மேககூட்டம் குறைதிருப்பதோடு குறைவான அளவிலும் மழை பெய்யும். இது தீபகற்ப மலேசியாவின் வடப்பகுதிகளில் வெப்பமான மற்றும் வறட்சி நிலையையும் ஏற்படுத்தலாம் என அது கூறியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!