ஷா அலாம். பிப் 22 –பாஸ் கட்சியும் அரசு சார்பற்ற 5 இயக்கங்களும் பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் ராமசாமிக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளன.
Loh Siew Hong கின் பிள்ளைகள் விவகாரம் தொடர்பில் இன அம்சங்களை கொண்ட அறிக்கையை ராமசாமி வெளியிட்டார் என அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஷா அலாம் பாஸ் தலைவர் Dr Mohd Fuad இந்த புகாரை செய்துள்ளார்.
பெர்லீசில் வயதுக் குறைந்த பிள்ளைகள் மதம் மாற்றப்பட்டது தொடர்பில் இணையத் தள பதிவேடு ஒன்றில் ராமசாமி வெளியிட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.