Latestமலேசியா

பாஸ் தலைமையிலான கெடா அரசு இனி தைப்பூச விடுமுறை வழங்குவது சந்தேகம்தான் – டாக்டர் ராமசாமி

ஜோர்ஜ் டவுன், ஜன 22 – கோவிட் -19 தொற்று முழுமையாக முடிவுக்கு வந்தாலும் இனி தைப்பூசத்திற்கான பொது விடுமுறையை பாஸ் தலைமையிலான கெடா அரசாங்கம் மீண்டும் வழங்குமா என்பது தமக்கு சந்தேகம்தான் என பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்தார். இம்மாதம் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூசத்திற்கான விடுமுறையை ரத்துச்செய்வதற்கு சுகாதார மிரட்டலை கெடா அரசாங்கம் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்துக்கள் கடுமையாக போராடிய பின்னர் –கெடாவில் 2013 ஆம் ஆண்டு தைப்பூசத்திற்கு பொது விடுமுறை பெறப்பட்டது. தீவிரவாத மற்றும் இனவாத போக்குடைய மந்திரிபெசார் கோவிட் தொற்றை பயன்படுத்தி இந்துக்களை பழிவாங்கியிருப்பதாகவும் ராமசாமி கூறினார். கெடா பாஸ் ஆணையருமான முகமட் சனுசி ஏற்கனவே சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி இரண்டு இந்து ஆலயங்களை தரைமட்டமாக்கியுள்ளதையும் பினாங்கு டி.ஏ.பியின் முன்னணி தலைவர்களில் ஒருரான டாக்டர் ராமசாமி சுட்டிக்காட்டினார்.

இந்த ஆலயங்களில் ஒன்று பாஸ் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே 100 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டதாகும். கோவிட் தொற்று முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டாலும் தீவிரவாத போக்கு சிந்தனையுடைய மந்திரிபுசார் சனுசி தலைமையிலான இப்போதைய பாஸ் அரசாங்கம் கெடாவில் இனி தைப்பூசத்திற்கு பொது விடுமுறை வழங்கும் சாத்தியம் இல்லையென்றே தாம் கருதுவதாக ராமசாமி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!