
கோலாலம்பூர் , மே 12 – மலாய்க்காரர்கள் அல்லாதாரும், முஸ்லிம் அல்லாதாரும் தேசிய ஒற்றுமைக்கு மிரட்டலாக இருப்பதாக பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ
Abdul Hadi Awang தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக DAP கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் Lim lip Eng போலீசில் புகார் செய்துள்ளார். நிந்தனை சட்டம் உட்பட பல்வேறு சட்டவிதிகளுக்க ஏற்ப பாஸ் தலைவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என கெப்போங் போலீஸ் நிலையத்தில் செய்த புகாரில் Lim Lip Eng கேட்டுக்கொண்டார். 1948 ஆண்டின் நிந்தனைச் சட்டம் மற்றும் 1998ஆம் ஆண்டின் தொடர்பு,பல்லூடக சட்டத்தின் பல்வேறு விதிமுறைகளுக்கு கீழ் Hadi Awang மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என Lim Lipu Eng கோரிக்கை விடுத்துள்ளார்.