
சிரம்பான், மே 13 – 36 கேங் கும்பலைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் சண்டையிடுவதற்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக ஜெம்போல் போலீஸ் தலைவர் Hoo Chang HooK தெரிவித்தார். சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு வீட்டிற்கு முன் கூடிய 10 ஆடவர்களையும் ஜெம்போல் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வெட்டுக் கத்திகள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இதர சில ஆயுதங்களும் அருகேயுள்ள இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவர்கள் சண்டையிடுவதற்கும் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கும் தயாராய் இருந்ததாக Hoo Chang Hook தெரிவித்தார்.