
சென்னை, ஜன 24 – கோலாகலமாகவும் பெரிய எதிர்பார்ப்புடனும் தொடங்கிய பிக்பாஸ் 6 நிகழ்ச்சி, ஜனவரி 22 ஒரு முடிவை எட்டியது. அதில் வெற்றிப்பெற்றுள்ள அசீம், தற்போது நெட்டிசன்களின் கடுமையான எதிர்ப்புக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.
விக்ரமன், அசீம், சிவின் ஆகிய மூவர் இறுதி போட்டியாளர்களாக இருந்த நிலையில், விக்ரமன் வெற்றிப் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த சமயத்தில் மிக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பிற போட்டியாளர்களை விமர்சித்த அசீம் வெற்றிப் பெற்றது மலேசியா உட்பட உலகலாவிய நிலையில் உள்ள அந்நிகழ்ச்சியின் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விக்ரமன் வெற்றி பெறாததற்கு அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதே காரணமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவ்விவகாரத்தில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசனையும் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை. அவரையும் பலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.