
சென்னை, ஜனவரி-20 – விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் 8-வது சீசனின் வெற்றியாளராக, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட முக்குதுக்குமரனே வாகை சூடியுள்ளார்.
வெற்றி கேடயத்துடன் 41 லட்சம் ரூபாய் பரிசுப் பணத்தை அவர் வென்றார்.
இந்த 8-வது சீசன் அக்டோபரில் தொடங்கியது முதலே பலரின் விருப்பப் போட்டியாளராக முத்துக்குமரன் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
105 நாள் போட்டியின் இறுதி நாளில் இரண்டாவது இடத்தை சௌந்தர்யா வென்றார்; இவரும் ஆரம்பம் முதல் இரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவராக வலம் வந்தவர் ஆவார்.
மூன்றாவது இடம் VJ விஷாலுக்குக் கிடைத்த வேளை, நான்காவது ஐந்தாவது இடங்களை முறையே பவித்ராவும் ரயானும் வென்றனர்.
கமல் ஹாசன் விலகிக் கொண்டதும், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய முதல் பிக் பாஸ் சீசன் இதுவாகும்.
பிக் பாஸ் போட்டி 9-வது சீசனிலும் தொடருமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.