பாலிக் புலாவ், ஆகஸ்ட் 16 – பாலிக் புலாவில், பிட்காயின்களை எடுப்பதற்காக, இறந்த நபரின் அடையாள அட்டை விவரங்களை வாடகை வீட்டு ஒப்பந்தத்திற்காக பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட வணிகர் ஒருவருக்கு நீதிமன்றம் 6,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
குற்றம் சாட்டப்பட்ட அந்த 42 வயது சோங் லிம் (Chong Lim), 2021ஆம் ஆண்டில் ஒரு வாடகை வீட்டின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, இறந்த 48 வயதான் செவ் கோக் வாஹ் (Chew Kok Wah) என்பவருக்குச் சொந்தமான அடையாள அட்டையைப் பயன்படுத்தியுள்ளார்.
Tenaga Nasional Berhad-யில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் திருடி, பிட்காயின் சுரங்க நடவடிக்கை மேற்கொள்வதற்காக வாடகை வீட்டிற்கு இறந்தவரின் விவரங்களை வழங்கி, 43 வயது சுந்தரேசன் (Sundresan) என்பவரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 419 இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அபராதம் விதிக்க தவறினால் 8 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.