பாசீர் கூடாங், டிசம்பர்-14, ஜோகூர் பாசீர் கூடாங்கைச் சேர்ந்த ஓர் இல்லத்தரசி, பிட்காயின் கிரிப்தோ நாணய முதலீட்டு மோசடியில் 700,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்டில் அம்முதலீடு குறித்த facebook விளம்பரத்தால் 47 வயது அம்மாது கவரப்பட்டார்.
இதையடுத்து VIP Investment என்ற பெயரிலான சமூக ஊடக குழுவில் சேர்ந்தவருக்கு, முதலீடு குறித்து பலர் விளக்கியுள்ளனர்.
ஒரே மாதத்தில் இலாபம் கொட்டுமென்றும் ஆசை வார்த்தைக் காட்டப்பட்டது.
அதை நம்பிய அம்மாது, அக்டோபர் 29 முதல் நவம்பர் 18 வரை 12 தடவையாக மொத்தம் 896, 813 ரிங்கிட்டை 7 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார்.
இலாப குறியீட்டைக் கண்காணிக்க முதலீட்டு செயலியையும் பதிவிறக்கம் செய்தார்.
அதில் 827, 142 ரிங்கிட் இலாபம் கிடைத்திருப்பதாக காட்டப்படவே, மகிழ்ச்சியில் அதனை மீட்க முயன்றார்.
ஆனால் வெறும் 144, 415 ரிங்கிட் மட்டுமே அவருக்குக் கொடுக்கப்பட்டது.
எஞ்சியத் தொகையையும் மீட்க வேண்டுமென்றால் கிடைத்த இலாபத்தில் 1% பணத்தைக் கட்ட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
அப்போது தான், தாம் ஏமாற்றப்படுவதாக சந்தேகம் வந்து அம்மாது போலீசில் புகார் செய்தார்.