Latestமலேசியா

பிந்துலுவில் காற்பந்து கோல் கம்பம் விழுந்து 11 வயது மாணவன் பலி

பிந்துலு, செப் 30 – சரவாக் பிந்துலுவில் பள்ளியில் காற்பந்து கோல் கம்பம்
விழுந்து 11 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இச்சம்பசம் செயின்ட் அந்தோனி தேசிய வகை ஆரம்பப்பள்ளியில் நிகழ்ந்துள்ளது.

பள்ளியில் புறப்பாட நடவடிக்கை நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனே இதுகுறித்த தகவல் போலிசுக்குத் தெரிவிக்கப்பட்டு அச்சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுவன் இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவத்தை விசாரித்து வரும் போலிசார் இதில் குற்ற அம்சம் ஏதும் இல்லையென கூறியுள்ள நிலையில், பொது மக்கள் இச்சம்பவம் குறித்து ஆருடம் எதனையும் வெளியிட வேண்டாம் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!