Latestமலேசியா

பினாங்கில் இவ்வாண்டு தீபாவளி சந்தைக்கு தடை

கோலாலம்பூர், அக் 14 – இவ்வாண்டு பினாங்கில் தீபாவளி சந்தை மற்றும் விற்பனை பெருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விற்பனை நிலையங்களுக்கு உள்ளேயும் அல்லது வெளியிலும் இம்மாதம் தொடங்கி தீபாவளி முடிவடையும் வரை அனைத்து வகையான தீபாவளி சந்தை மற்றும் விற்பனை பெருவிழாவுக்கு தடை விதிப்பது என பினாங்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து பினாங்கு கவுன்சிலர் David Marshel வணக்கம் மலேசியாவுக்கு வழங்கிய விளக்கத்தை இப்போது கேட்கலாம்.

கோவிட் அல்லாத தீபாவாளியை கொண்டாடுவதற்கு மட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மூடப்பட்டிருந்த கடை உரிமையாளர்களுக்கு தீபாவளி பண்டிகையின்போது அவர்களது வருமானத்திற்கு உதவும் பொருட்டு பினாங்கு அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை கடை உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளும் அதே வேளையில் மக்களுக்கு சுமையில்லாமல் பொருட்களின் விலை இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!